மன்னிப்பு ஏன்?

மன்னிப்பதற்கான நான்கு படிகள்
புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

மன்னிப்பு உங்களை மனச்சுமையில் இருந்து விடுவிக்கிறது

மன்னிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அது உங்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது, அதேபோல உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கிறது. நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும், அல்லது உங்களை மன்னிக்கவேண்டும் என்றால், அவ்வாறு செய்வது கடந்தகாலத்தில் இருந்து உங்களை விடுவித்து, உங்களின் உண்மையான முழுத்திறத்தையும் நிறைவேற்ற உதவுகின்றது. மன்னிப்பு உங்களை நம்பிக்கைகளும் மனப்பான்மைகளும் கட்டுப்படுத்துவதில் இருந்து விடுவிக்க உங்களை அனுமதிக்கிறது. அது உங்களின் மனம் மற்றும் உணர்ச்சி ஆற்றல்களில் இருந்து உங்களை விடுவிக்கின்றது, எனவே சிறந்த வாழ்க்கையை உருவாக்க அவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும்.

மன்னிப்பு உங்களின் மிகுந்த நடைமுறைக்கேற்ற மற்றும் உடனடி இலக்குகளை அடைவதற்கும் கூட உங்களுக்கு உதவுகிறது. ஒருவேளை உங்களுக்கு நல்ல வேலை தேவை, அதிகப் பணம் சம்பாதிக்க, நல்ல உறவுமுறைகள் இருக்க, அல்லது ஓர் இனிமையான இடத்தில் வாழவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். இவை அனைத்தையும் அடைய மன்னிப்பு உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், பிறகு உங்கள் உள் வாழ்க்கை ஆற்றலானது, வெறுப்பு, கோபம், வலி, அல்லது ஏதாவது ஒருவகை துன்பம் ஆகியவற்றில் சிக்கிக் கொள்கிறது. இந்த சிக்கலான வாழ்க்கை ஆற்றல் உங்களைக் கட்டுப்படுத்தும். இது எந்தநேரமும் சற்றே பிரேக்குகளைப் பிடித்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட முயற்சிசெய்வது போன்றதாகும். அது உங்கள் வேகத்தைக் குறைக்கிறது, தடையாக உள்ளது, முன்னோக்கிச் செல்வதற்கு கடினத்தை ஏற்படுத்துகிறது. புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

நீங்கள் செய்யும் தேர்வுகள், நீங்கள் நம்பும் விஷயங்கள் எல்லாம் நீங்கள் மன்னிக்காத வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், மகிழ்ச்சியற்ற சிந்தனைகள், உணர்வுகள் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள், உங்களை கட்டுப்படுத்தும் வாழ்க்கைக்கு, அல்லது அதிக துன்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்க முடியும். நீங்கள் மன்னிப்பு குறித்து கற்றுக்கொண்டு நீங்கள் சொந்தமாகப் பயன்பெற விரும்பவில்லை என்றால்; நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதால், மற்றவர்கள் பயன்பெற முடியும். நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதால், உங்களுடன் தொடர்புள்ள அனைவருக்கும் அது பயன்தரும். முன்பைவிட உங்களின் சிந்தனை தெளிவாகவும் மேலும் நேர்மறையாகவும் இருக்கும். நீங்கள் கொடுப்பதற்கு உங்களிடம் நிறைய இருக்கும், மேலும் உங்களிடம் உள்ளதை எந்த அளவிற்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் இயல்பாகவும் சுலபமாகவும் அன்பானவராகவும், மிகுந்த தாராள மனமுடையவராகவும், மற்றவர்களை மிகவும் கவனித்துக் கொள்பவராகவும் ஆகிவிடுவீர்கள் – எந்த சிரமமுமின்றி இதை நீங்கள் அடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியும் நேர்மறையான மனப்பான்மை மிக்கவராகவும் இருப்பீர்கள், மேலும் பதிலுக்கு அவர்கள் அதிக நேர்மறையான பதிலை உங்களுக்கு அளிப்பார்கள்.

மன்னிப்பதற்கான நான்கு படிகள்
புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

மன்னிக்காத ஒருவரைவிட மன்னிக்கும் நபர் கவலையற்று இருக்க முடியுமா? ஆம், நிச்சயமாக அவர்களால் இருக்கமுடியும். மன்னிக்காத ஒருவரைவிட மன்னிக்கும் நபர் எப்போதுமே கவலையற்றுஇருக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் தரம் உங்கள் உறவுமுறைகளின் தரத்தைப் பொறுத்து உள்ளது. நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், உங்கள் குடும்பத்திலோ, உங்கள் வேலையிலோ அல்லது சமூக வாழ்க்கையிலோ உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நல்லதாக மாறும். மன்னிக்க கற்றுகொள்ளுதல் உங்கள் உறவுமுறைகள் அனைத்தையும் மேம்படுத்தும், ஏனெனில் உங்கள் மனப்பான்மை மேம்படும். உங்கள் உறவுமுறைகள் மேம்படும்போது, பிறகு உங்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் மேம்படும்.

நிதி வளமும் வெற்றியும் பெறுவதற்கான அடுத்த நிலைக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், மன்னிப்பு அதை அடைய உங்களுக்கு உதவும். உதாரணமாக, உங்கள் வாழ்க்கையில் அதிகப் பணம் தேவை என்று நீங்கள் விரும்பினால், உங்களைவிட அதிகப் பணம் வைத்துள்ளவர்களிடம் நீங்கள் கோபப்படக் கூடாது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். உங்களைவிட அதிகப் பணத்தை வைத்திருப்பவர்களே நீங்கள் அதிகப் பணம் வைத்திருக்க உங்களுக்கும் உதவுகிறார்கள். சில பேர் செய்வது போல, “பணம் வைத்திருப்பவர்களிடம்” நீங்கள் கோபப்பட்டால், பிறகு அவர்கள் உங்களுக்கு உதவி செய்யமுடியாது, ஏனெனில் அவர்களிடம் கோபப்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நீங்கள் மனம் திறக்கமாட்டீர்கள். அதேபோல, உங்களைவிட அதிக வெற்றிபெற்றவர்களிடம் உங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை இருந்தால் (அவர்களை வெறுப்புடன் பார்ப்பதற்குப் பதிலாக அவர்களிடம் புன்னகைத்;தால்), அவர்கள் உங்களை அணுகக்கூடியவராக பார்ப்பார்கள், அநேகமாக உங்களுடன் சேர்ந்து வேலைசெய்யவோ அல்லது பழகவோ விரும்புவார்கள். புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

உங்களுக்கு நல்ல வேலை தேவை, அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், பிறகு நீங்கள் வேலை செய்யும் இடம், உங்களுடைய மேலதிகாரி, உங்கள் சக ஊழியர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் நீங்கள் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது உங்களுக்கு மிகவும் உதவும். நேர்மறையான எண்ணம் உடையவர்கள், உதவும் மனப்பான்மை உடையவர்கள் எந்த சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காமல் நிற்பார்கள். நீங்கள் வெற்றிபெற விரும்பாத ஒரு நிறுவனத்தில் நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது, ஏனெனில் உங்களின் சிறந்தவற்றை நீங்கள் கொடுக்க மாட்டீர்கள். உங்களுடைய சிறந்ததை, உங்களால் செய்யமுடிந்த சிறந்த வேலையை நீங்கள் கொடுக்கவில்லை என்றால், பிறகு உங்களுக்கு வரவேண்டிய சிறந்தவற்றை நீங்கள் பெற மாட்டீர்கள். மன்னிப்பு அவ்வகையான மனப்பான்மையை நீங்கள் பெறுவதற்கு உங்களுக்கு உதவும், அது உங்கள் வேலையில் மிகுந்த வெற்றியைப் பெறச் செய்யும்.

உங்களை நீங்கள் மன்னிக்க கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் உங்களை மன்னிப்பதை மறுப்பதன் மூலம், உங்கள் மனதை நீங்கள் புண்படுத்திக் கொள்கிறீர்கள், மற்றவர்களையும் புண்படுத்துகிறீர்கள். உங்களை நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் பிறகு வாழ்க்கையில் நல்ல விஷயங்களை நீங்கள் மறுப்பதன்மூலம் உங்களை நீங்கள் தண்டித்துக் கொள்வீர்கள். புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

உங்களுக்குள்ளே நீங்கள் அதிகம் நிராகரித்தால் நீங்கள் குறைவாக கொடுக்கவேண்டி இருக்கும். நீங்கள் குறைவாக கொடுத்தால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு குறைவாகவே நன்மை அளிக்கமுடியும். நீங்கள் பெறுகின்ற அளவைக் கட்டுப்படுத்தும்போது, உங்களால் கொடுக்க முடிந்ததையும் நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். உங்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்கள் என்றால், பிறகு உங்கள் வாழ்க்கையில் அதிக நல்லவற்றை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பதால் நீங்கள் பகிர்ந்து கொள்ள உங்களிடம் நிறைய இருக்கும். நீங்கள் மன்னிக்கும்போது; நீங்கள் சிறந்த கணவராக அல்லது மனைவியாக ஆகிறீர்கள், நீங்கள் சிறந்த மாணவராக அல்லது ஆசிரியராக ஆகிறீர்கள், நீங்கள் சிறந்த முதலாளியாகவோ அல்லது ஊழியராகவோ ஆகிறீர்கள், சிறந்த ஒரு பெற்றோராகவோ அல்லது குழந்தையாகவோ ஆகிறீர்கள். நீங்கள் மன்னிக்கும்போது உங்களுக்கு அர்த்தமுள்ள வழிகள் யாவும் வெற்றிக்கு அதிகமாக திறக்கிறது. நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், நடக்க முடியாது எனத் தோன்றியது எதுவாக இருந்தாலும் அது நடப்பது மட்டுமின்றி, அதை எளிதாக அடையமுடியும்.

மன்னிப்பதற்கான நான்கு படிகள்
புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

நீங்கள் சமய, அல்லது ஆன்மீக மனமுள்ள நபராக இருந்தால், பிறகு மன்னிப்பதற்கான நடைமுறை வழிகளைக் கற்றுக்கொண்டால், அது உங்கள் சமய அல்லது ஆன்மீக பயிற்சியின் உங்கள் அனுபவத்தை அதிகரிக்கவும் ஆழப்படுத்தவும் செய்யும். “நல்லவராக” இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் இருக்கின்ற குற்ற உணர்வில் இருந்து விடுவிக்க அது உதவும், ஏனெனில் நீங்கள் இருக்க விரும்பும் நபராக ஆவதற்கு அது உதவும். மன்னிப்பை பயிற்சிசெய்வது உங்களுக்குள் நற்குணத்தைப் பலப்படுத்துகின்றது, ஆகவே உங்கள் வாழ்க்கையில் அது அதிக செயல்திறமுள்ளதாக ஆகும். உங்களால் செய்ய முடியாது என்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களில் குறைந்த நாட்டம் உள்ளதை நீங்கள் இயல்பாக உணருவீர்கள், ஆனால் அவற்றைச் செய்வதை உங்களால் நிறுத்திக் கொள்ளமுடியாது. உங்களுக்குத் தெரிந்த நீங்கள் செய்யவேண்டிய அதிக விஷயங்களை நீங்கள் செய்யத் தொடங்குவீர்கள், ஆனால் அதில் நீங்கள் ஈடுபட்டு செய்வதற்கு உங்களால் முடியாது.

மன்னிக்கக் கற்றுக்கொள்ளுதல் மட்டுமே உங்களுக்கு உதவ முடியுவும் ; அது உங்களை காயப்படுத்தாது. புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

மன்னிப்பு மிகவும் நடைமுறைக்கேற்றது, உதவிகரமானது. அதுபற்றி தெளிவற்றதோ, அல்லது நடைமுறை சாத்தியமற்றதோ ஏதுமில்லை. மன்னிப்பு உங்களை விடுவிக்கிறது. மன்னிக்க கற்றுக்கொண்டால் பல பிரச்சினைகள் (அநேகமாக உடல்நலப் பிரச்சினைகள் கூட) படிப்படியாக மறைந்துவிடும். உங்கள் வாழ்க்கையை மேலிருந்து நீங்கள் பார்க்க முடியக்கூடியதாக அது இருக்கும், நீங்கள் இருக்க விரும்பும் இடத்தை அடைவதற்கான மிகச் சுலபமான வழியைப் பார்க்கமுடியும். எங்குமிருந்தும் புதிய வாய்ப்புகள் உருவாகும். சரியான நேரத்தில் சரியான நபரை நீங்கள் சந்திக்கும் மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வுகள் நடக்கும். உங்களுக்கு தேவையானபோது யோசனைகள் அல்லது பதில்கள் உங்களுக்கு வரும். ஒரு நண்பர் ஒரு கருத்தைச் சொல்லலாம், அல்லது ஒரு புத்தகத்தை அல்லது பத்திரிகையை நீங்கள் திறக்கலாம், அல்லது நீங்கள் தேடும் ஓர் உரையாடலை நீங்கள் கேட்கலாம். இது ஏன்? ஏனென்றால், மன்னிப்பை நீங்கள் பயிற்சிசெய்வதன் மூலமாக வாழ்க்கையில் நற்குணத்திற்கு நீங்கள் மனதை திறக்கிறீர்கள், ஆகவே நற்குணம் உங்களைத் தேடி வரமுடிகிறது.

நீங்கள் மன்னிக்க கற்றுக்கொண்டால், உங்களிடம் உறங்கிக்கிடக்கும் திறமைகள் வெளிப்படும், முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட மிக வலுவான, மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள். மன்னிப்பு அளிக்காத விறைப்பான மண்ணில் செழித்து வளரமுடியாத உங்களின் பாகங்கள் இனி வளரத் தொடங்கும். போராட்டத்தையும் தேடலையும் நீங்கள் விட்டுவிடத் தொடங்குவீர்கள். நீங்கள் ஒரு எளிமையான ஓட்டத்தைக் கண்டறிவீர்கள், வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியாகவும் மிகுந்த சுவராஸ்யமாகவும் இருக்கும். இவை யாவும் மிகைப்படுத்துவது போல இருந்தால், பிறகு இப்போதைக்கு அது அவ்வாறே இருக்கட்டும். இப்பக்கங்களில் காணும் மன்னிப்புக்கான நான்கு படிகளை எளியமுறையில் பயிற்சி செய்யுங்கள், அதன்பின் நீங்கள் செய்தீர்கள் என்ற மிகுந்த மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும்.

புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

புத்தகங்களைப் பதிவிறக்க இலவச மன்னிப்பதற்கான நான்கு படிகள்

மன்னிப்பதற்கான நான்கு படிகள்
புத்தகங்களைப் பதிவிறக்க இலவச

மன்னிப்பதற்கான நான்கு படிகள்

சுதந்திரம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு ஒரு சக்திவாய்ந்த வழி

வில்லியம் ஃபெர்குஸ் மார்ட்டின்